crossorigin="anonymous">
உள்நாடுபொது

மன்னார் உயிலங்குளம் பொலிஸ் காவல் அரண் பொலிஸ் நிலையமாக தரமுயர்வு

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவல் அரண் பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டு நேற்று (23) மக்கள் பாவனைக்காக வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது

பொதுமக்களின் இலகு தன்மையை அடிப்படையாக கொண்டு நாடு முழுவது 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்த நிலையில் மன்னார் உயிலங்குளம் காவலரண் பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வில் வட மாகாண சிரேஸ்ர பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்ம ரத்தின அவர்கள் மற்றும் மன்னார் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீர சிங்க இணைந்து வைபவரீதியாக பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தனர்

அதேநேரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 − = 56

Back to top button
error: