crossorigin="anonymous">
உள்நாடுபொது

“லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை?”

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் குழுக்களை அம்பலப்படுத்துவீர்களா இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

லசந்த விக்கிரமதுங்கவை கொன்ற கொலையாளிகள் பாராளுமன்றத்தில் இருந்தால் அந்த நபர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக கேள்வி எழுப்ப தாம் ஒருபோதும் பயப்படவில்லை என்றும், இந்த விடயத்தில் உரிய நீதி கிட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 97 − 91 =

Back to top button
error: