crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை’ – சஜித் பிரேமதாச

கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் - எதிர்க்கட்சித் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும்,இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காதினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை என்றும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம் என்றும்,அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல்,இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள் என்றும்,இன்றும் நீதி கிடைக்காததால்,காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல்,முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − 92 =

Back to top button
error: