எரிபொருட்களின் விலைகள் இன்று (31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா.
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 417 ரூபா.
ஓட்டோ டீசல் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபா.
சுப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 359 ரூபா.
மண்ணெண்ணெய் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 231 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.