இலங்கை எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சீனாவின் Sinopec நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (30) ஆரம்பித்தது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சீனாவின் Sinopec நிறுவனம் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு உரிமை உண்டு.