crossorigin="anonymous">
உள்நாடுபொது

வறட்சி தொடருமானால் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தி

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சி தொடருமானால் மேலும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதுடன், அனல் மின் உற்பத்தி காரணமாக தற்போது மின்சாரத்தை தடையின்றி வழங்க முடிந்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

சமனல நீர்த் தேக்கத்தின் நீர் கொள்ளளவு 1 வீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 21 வீதமாகவும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 35 வீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 25 வீதமாகவும் குறைந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 + = 54

Back to top button
error: