crossorigin="anonymous">
உள்நாடுபொது

வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92,431 பேர் பாதிப்பு

நாட்டில் வறட்சி காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த 92 , 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களிலும் வறட்சியினால் 28,837 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 21,714 குடும்பங்களை சேர்ந்த 69,113 பேர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, சேருவில, குச்சவௌி, வெருகல், மூதூர், கோமரங்கடவெல ஆகிய பிரதேசங்களில் நிலவும் வறட்சியால் 2,074 குடும்பங்களை சேர்ந்த 8,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 1666 குடும்பங்களை சேர்ந்த 5, 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவடத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த 251 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 + = 58

Back to top button
error: