crossorigin="anonymous">
உள்நாடுபொது

சமூக இடைவெளி பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் – பொலிஸ்

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று (22) முதல் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் நேற்றைய (21) தினம் பல இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக் கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக  மேலும் தெரிவிக்கையில்,

“பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முதல் நாடு பூராகவும் விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 63 = 73

Back to top button
error: