crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் ஏழாவது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவை இலங்கை பாதுகாப்பு படையினருடன் இணைந்து ஏழாவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் முகமாக இன்றைய தினம் (21) மெய்நிகர் மார்க்கம் ஊடாக விசேட யோகா அமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை பாதுகாப்புச் செயலர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரட்ன அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த அதேசமயம் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும், இலங்கையிலுள்ள கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பயிற்சி பாடசாலைகள், பாதுகாப்பு அக்கடமிகள் மற்றும் கப்பல்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 150 பாதுகாப்பு ஸ்தாபனங்களைச் சேர்ந்த பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மிகுந்த உற்சாகத்துடன் இலங்கையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகின்றது இந்த நிகழ்வுகளில் இலங்கையின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்றிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பெரு நோயினால் மேலெழுந்திருக்கும் சவால்களுக்கு மத்தியில் இவ்வருடம் ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்நிலை அமர்வுகள் பலவற்றில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமானொர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: