crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்றம் நாளை மற்றும் நாளை மறுதினம்  கூடும்

இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நாளைய தினம் (22) இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்த) சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் ஆகியன விவாதத்துக்கு எடுத்தக்கொள்ளப்படவிருப்பதாக பராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

இந்த விவாதம் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்று அது தொடர்பான வாக்கெடுப்பும் இடம்பெறும். அன்றைய தினம் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நாளை மறுதினம் 23ஆம் திகதி உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்கு விதிகளும், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு மதிப்பீடும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அன்றைய தினம் முற்பகல் 10.00 முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 வரையான நேரம் எதிர்க் கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காவும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: