crossorigin="anonymous">
உள்நாடுபொது

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று (09) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர்.

கணக்காய்வாளர் நாயகம் பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராவார். அதற்கமைய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன பதவிச்சத்தியம் செய்துகொண்டார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானன், ஏ.எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோரும் பதவிச்சத்தியம் செய்துகொண்டானர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − = 23

Back to top button
error: