crossorigin="anonymous">
உள்நாடுபொது

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு (Laugfs Gas) சிலிண்டரின் விலையும் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது

12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3990 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1596 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகளும் நேற்று (04) நள்ளிரவு குறைக்கப்பட்டுள்ளது

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும்

2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 4 =

Back to top button
error: