crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீதித்துறை – அரசியலமைப்பிற்கிடையில் முரண்பாடு தவிர்க்கப்பட வேண்டும்

இலங்கை நீதிச்சேவைகள் சங்கம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம்

இலங்கை நீதிச் சேவைகள் சங்கம், நீதித்துறை மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் பின்னர் நீதித்துறைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் தேவையற்ற மோதலை உருவாக்க பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நீதிச் சேவைகள் சங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிச்சேவைகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு 18 ஆம் திகதி கூடிய கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பிற்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை அதிகாரங்களை செயற்படுத்தும் மூன்று முக்கிய நிறுவனங்களான பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே சமநிலை பேணப்பட வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: