crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரை சந்திக்க எதிர்பார்ப்பு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக ​தெரிவித்துள்ளது.

வேட்பாளராக களமிறங்கியுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 45 = 46

Back to top button
error: