crossorigin="anonymous">
உள்நாடுபொது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி

லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திடம் 14 கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகக் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் பெற்று (22) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ்விசேட கூற்றை முன்வைத்தே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பினார்.

.குறித்த நிறுவனங்களின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரச பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவால் முன்மொழியப்பட்டுள்ளதோடு, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி பின்வரும் விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு கீழ்வரும் கேள்விகளை எழுப்பினார்.

வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தில் 49.50% திறைசேரி வைத்திருக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி பங்குகளை விற்க யாரால் முடிவு செய்யப்பட்டது? எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி 2012 முதல் 2022 வரை பெற்ற வரிக்குப் பிந்தைய வருடாந்த இலாபத்தை (Profit after Tax) இந்தச் சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? என்று வினவினார்.

குறித்த 10 ஆண்டுகளில், ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி அதன் பங்கு உரித்துடமைக்காக திறைசேறிக்கு ஆண்டுதோறும் எவ்வளவு இலாபத்தொகையாக செலுத்தியுள்ளது? இதுவரை டெலிகொம் பி எல் சி நிறுவனத்திடம் இருந்து கிடைத்த வருமானம் இனிமேலும் எவ்வாறு கிடைக்கும் என்பதை இந்த சபைக்கு விளக்குவீர்களா? என கேட்டார்.

குறித்த 10 ஆண்டுகளில் ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி வரியாக எவ்வளவு தொகையினை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது?

இந்நாட்டின் இரகசிய தகவல் கட்டமைப்பு உட்பட தரவு அமைப்புகளுடன் தொடர்புடைய பல சொத்துக்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் காரணமாக குறித்த நிறுவனங்களின் உரிமம் வெளிநாட்டு நிறுவனங்கள் வசமாதல் என்ற ஆபத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா? என்ற கேள்விகளையும் எழுப்பினார்.

அரசாங்கத்தின் சார்பாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 51.34% உரிமமுடைய லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி எல் சி யின் குறித்த பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது யார்? எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி 2012 முதல் 2022 வரை பெற்ற வரிக்குப் பிந்தைய வருடாந்த இலாபத்தை (Profit after Tax) இந்தச் சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

குறித்த 10 ஆண்டுகளில்,லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி அதன் பங்கு உரித்துடமைக்காக திறைசேறிக்கு ஆண்டுதோறும் எவ்வளவு இலாபத்தொகையாக செலுத்தியுள்ளது?

குறித்த 10 ஆண்டுகளில் லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி வரியாக எவ்வளவு தொகையினை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது?

மலேசியாவின் Khazanah Nasional Berhad மற்றும் சிங்கப்பூர் Temasek Holdings Limited மாதிரிகள் போன்ற ஒரு பொதுச் சொத்து முகாமைத்துவக்கட்டமைப்பு Sovereign Wealth Fund Management ஊடாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் (SOEs) இலாபகரமானவையாகவும்,
நாட்டுக்கு சாதகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏன் முயற்சிக்கவில்லை?அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில்,குறித்த வேலைத்திட்டம் வெளிப்படுத்தப்படுமா?

அரச நிறுவனங்களை மேம்படுத்தவும் அரசின் வருவாயை அதிகரிக்கவும், தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவு அல்லது பிற பொருளாதார நிபுணர்கள், ஆலோசகர்களுக்கு பொதுச் சொத்துக்களை விற்பது மட்டுமே உத்தியாக அமைந்துள்ளதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: