crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வமத வழிபாடுகளில்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11)  கண்டிக்கு விஜயம் செய்து சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டார்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதிர்கட்சித் தலைவர் விஜயம் செய்து புனித தந்த தாதுவை வழிபட்டு ஆசி பெற்றுக்கொண்டார்

அதன் பின்னர்,மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து மகா விஹாராதிபதி சியாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

தொடர்ந்து கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்து மகா விஹாராதிபதி ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி மகா விகாரையின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கும் சென்று இஸ்லாமிய மத வழிபாடுகளில் (துஆப் பிரார்த்தனைகளில்) ஈடுபட்டார்

கண்டி கட்டுகெலே இந்து ஆலயத்திற்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்று இந்து மத ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்,

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 3 =

Back to top button
error: