crossorigin="anonymous">
உள்நாடுபொது

மாகாணங்களுக்குள் மூன்று தினங்களுக்கு புகையிரத சேவைகள் 

இலங்கை முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளையிலிருந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மாகாணங்களுக்குள் புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு நாளை (21) அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 23ஆம்திகதி இரவு 10.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக பிரதான புகையிரத பாதைகளில் 06 புகையிரதங்களும், கடலோர பாதையில் 04 புகையிரதங்களும், களனி புகையிரத பாதையில் 04 புகையிரதங்களும், புத்தளம் புகையிரத பாதையில் 03 புகையிரதங்களும் சேவையில் ஈடுப்படும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திலிருந்து 3 புகையிரதங்களும், மீரிகம புகையிரத நிலையத்திலிருந்து ஒரு புகையிரதமும் பிரதான பாதையில் சேவையில் ஈடுப்படும்.

இதேவேளை வேயாங்கொட புகையிரத நிலையத்திலிருந்து ஒரு புகையிரதமும் , கம்பஹா புகையிரத நிலையத்திலிருந்து ஒரு புகையிரதமும் , கரையோர புகையிரத பாதையில் அலுத்கமவிலிருந்து 04 புகையிரதங்களும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

களனிவேலி புகையிரத பாதையில் – அவிசாவலையிலிருந்து 02 புகையிரதங்களும், பாதுக்கவிலிருந்து 02 புகையிரதங்களும், சிலாபம் – கொச்சிக்கடை புகையிரத நிலையத்தில் ஒரு புகையிரதமும், நீர்கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து 02 புகையிரதங்களும் சேவையில் ஈடுப்படவுள்ளன.

பிரதானபுகையிரத பாதையில் வேயாங்கொட மற்றும் மீரிகமவிலிருந்து வரும் 02 புகையிரத சேவைகள் பாணந்துறை வரை நீடிக்கப்படவுள்ளன.

கண்டியிலும் பொல்கஹவெல மற்றும் மஹவக்கிடையிலும் அனுராதபுரத்திலும் புகையிரத சேவையில் ஈடுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவம் அவர் மேலும் தெரிவித்தா

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 29 = 37

Back to top button
error: