crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஏப்ரல் 21  தாக்குதளுக்காக மன்னிப்பு கோருகிறேன் – மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

தமக்கு தெரியாமல் வேறொரு தரப்பினரால் தமது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதளுக்காக மன்னிப்பு கோருவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால (31) தெரிவித்தார்

தமக்கு தெரியாமல் வேறொரு தரப்பினரால் தமது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அதேபோன்று கத்தோலிக்க மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்

இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்

தாம் தவறிழைத்ததாக அர்த்தப்படாது எனவும் ஜனாதிபதி என்ற வகையில் தம்மால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அதற்கு ஒரு ஜனாதிபதியாக பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதெனவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 86 = 88

Back to top button
error: