மட்டக்களப்பில் போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச தினம்
போதைப் பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கான சர்வதேச தினம் எதிர்வரும் ஜூன் 26 ஆந் திகதி மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக மட்டக்களப்பின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் “போதைப்பொருள் பற்றிய உண்மைகளைப் பகிர்வோம், உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நடமாடும் விழிப்புனர்வு நிகழ்வுகளை நடாத்த பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவு ஏற்பாடுகள் செய்துள்ளது.
எதிர்வரும் 26 ஆந்திகதி இடம்பெறவுள்ள இவ்விழிப்புனர்வு நிகழ்வுகளுக்கான பதாதைகளைக் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (18) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அக்சன் யுனிடி லங்கா அமைப்பின் அனுசரணையில் வழங்கப்பட்ட இப்பதாதைகளை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜே. பிரகாஸ், அரசாங்க அதிபர் கே. கருணாகரனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் ஜீ. விஜயதர்சன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.