crossorigin="anonymous">
பொது

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாஸ

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று (11) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைவராக மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான முன்மொழிவை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்ததோடு, அதனை கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்திருந்தனர்.

கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளராகவும், ரஞ்சித் மத்தும பண்டார அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவானார். அத்துடன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரினால் செயற்குழு உத்தியோகத்தர்கள் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் கட்சியின் மூன்றாவது வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டதோடு அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

லக்‌ஷ்மன் கிரியெல்ல -சிரேஷ்ட பிரதித் தவிசாளர்
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் – சிரேஷ்ட பிரதித் தவிசாளர்
கபீர் ஹஷீம் – சிரேஷ்ட பிரதித் தவிசாளர்
ராஜித சேனாரத்ன – சிரேஷ்ட பிரதித் தவிசாளர்
ரவீந்திர சமரவீர – சிரேஷ்ட பிரதித் தவிசாளர்
தலதா அத்துகோரள – பிரதித் தவிசாளர்
கயந்த கருணாதிலக – பிரதித் தவிசாளர்
திலிப் வெதஆரச்சி – பிரதித் தவிசாளர்
ஏ.எச்.எம். ஹலீம் – பிரதித் தவிசாளர்
சந்திரானி பண்டார – பிரதித் தவிசாளர்
பீ. ஹரிஸன் – பிரதித் தவிசாளர்
சுஜீவ சேனசிங்க – பிரதித் தவிசாளர்
ஜே.சி. அளவத்துவல – பிரதித் தவிசாளர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − 44 =

Back to top button
error: