crossorigin="anonymous">
பொது

75 சுதந்திர தினத்தன்று பூங்கா, திரைப்படங்கள் 50% கட்டண கழிவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் யோசனை

75 ஆவது சுதந்திர தினத்தன்று, தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை 50% கட்டண கழிவில் பார்வையிடுவதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

01. 75 ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கல்

75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும்,

அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தின் 50% வீதக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 7 =

Back to top button
error: