பொது
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்..
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன் வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும், மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.