crossorigin="anonymous">
பொது

பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல்.பீரிஸ், இன்று (31) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

2022 இடைக்கால பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (31) இடம்பெற்றபோதே விசேட உரையொன்றை நிகழ்த்திய ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சியில் இணைந்து சுயாதீனமாக செயட்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர,

கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 10 = 12

Back to top button
error: