crossorigin="anonymous">
பொது

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது

அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தியாவிலிருந்து விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று (23) இலங்கை வருகிறது

இந்தியாவின் பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர்.

இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கை நிலவரத்தை ஆராய்வதற்காக இக்குழு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை விஜயம் மேற்கொள்ளும் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடட உயர்ரதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் இலங்கை நிலவரத்தை ஆராய்வதற்காக பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்தநாகேஸ்வரன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் நிதியமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 − = 54

Back to top button
error: