crossorigin="anonymous">
பொது

நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என். ஜயவிக்ரமவை இன்று (16) மாவட்ட செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது கல்வி,சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, மீள்குடியேற்றம், குடிநீர் ஏனைய நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

“திருகோணமலை மாவட்டம் விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்களை மையமாகக் கொண்டவர்கள் வாழும் மாவட்டமாகும். இம்முறை சிறுபோகத்தில் 28000 ஹெக்டேயர் நெல் வேளாண்மை பயிர்ச் செய்கை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது நெருக்கடி மிக்க சூழ்நிலையில் வீட்டுதோட்டப் பயிர்ச் செய்கையை ஊக்கப்படுத்தும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொண்டு உற்பத்தி முயற்சிகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றோம்.

சூரிய மின்சக்தி, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் முதலீடுகள் வேண்டப்படுவதாகவும் அத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது உசிதமாக அமையும்” என இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபருக்கு ஓர் நினைவுச்சின்னத்தை வழங்க அரசாங்க அதிபர் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகருக்கு ஓர் நினைவுச் சின்னத்தை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான நியூஸிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் Andrew Traveller, மேலதிக அரசாங்க அதிபர் ஜெ.எஸ். அருள்ராஜ், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கெ.எஸ். குருகுலசூரியவும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 9 = 1

Back to top button
error: