crossorigin="anonymous">
உள்நாடு

173 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவின் பரிந்துரைக்கு அமைய, சிறு குற்றங்கள், அபராதம் செலுத்த வழியின்றி சிறையில் அடைக்கப்பட்டமை போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த 173 சிறைக் கைதிகள் விசேட பொதுமன்னிப்பின் கீழ் இன்று (14) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

புனித பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இவ்வாறு றைக் கைதிகள் விசேட பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மெகசீன், போகம்பறை, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, பதுளை, நீர்கொழும்பு, குருவிட்ட, மஹர, வாரியபொல, அநுராதபுரம், களுத்துறை, காலி, தல்தென, வட்டரெக, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலன்னறுவை, கேகாலை, மொணராகலை, பல்லன்சேன, பல்லேகலை, வீரவில ஆகிய சிறைச்சாலைகளிலிருந்த கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 59 =

Back to top button
error: