crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை திறந்து வைப்பு

கட்டிடத் தொகுதி 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை மக்களிடம் கையளிக்கும் வைபவம்  இன்று (11) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், 2015ஆம் ஆண்டில் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சீன அரசாங்கத்தின் முழுமையான அன்பளிப்பாக இந்த மருத்துவமனைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கேயுரிய பண்டைய கால கட்டிடக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக் கட்டிடத் தொகுதி 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளதுடன் இதற்காக, 1200 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள், 30 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளதுசிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன்கூடிய 5 சத்திர சிகிச்சைக் கூடங்களைக் கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் 200 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் உள்ளன.

20 கட்டில்கள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் 100, சிறுநீரக நோய் சிகிச்சைக் கட்டிடத் தொகுதி, நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பரிசோதனை நிலையம், ஆய்வுகூடம், கதிரியக்க மற்றும் CT ஸ்கேன் சேவைகள், மற்றும் நவீன கேட்போர்கூடம் என்பவையும் இந்த மருத்துவமனைக் கட்டிட தொகுதியில் அடங்குகின்றன.

300 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடம் மற்றும் மருத்துவமனைப் பணிக்குழாமைச் சேர்ந்த அனைவருக்குமான தங்குமிட வசதிகளையும் இது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹொங், நாடாளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அத்துகோரல, சுரேன் ராகவன், ஜனாதிபதி தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − = 22

Back to top button
error: