crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அனுராதபுரம் மாவட்டத்தில் எச். ஐ. வி தொற்று 13 பேர் அடையாளம்

2022 வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அனுராதபுரம் மாவட்டத்தில் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பாலின சுகாதார சேவைகள் நிலையத்தின் வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார்

பாதுகாப்பற்ற உடலுறவு முறையே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் கூறினார்.கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம, ஹொரவபத்தான, மத்திய நுவரகம் மற்றும் மெதவச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில், மாவட்டத்தில் பதிவாகியுள்ள எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2022 இன் முதல் 5 மாதங்களில் 13 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகின்றது.

அனுராதபுரத்தில் முதற் தடவையாக சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே எச்.ஐ.வி. தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 + = 66

Back to top button
error: