crossorigin="anonymous">
உள்நாடு

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம்

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர் சபை முதல்வரும், வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் முதன் முறையாக நேற்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதும், தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகும்.

பாராளுமன்ற விசேட குழுவின் பணிகள் தொடர்பில், அதன் தலைவர் தினேஷ் குணவர்தன குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவித்ததை அடுத்து, குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

புதிதாக பாராளுமன்ற குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை தலைவர் வரவேற்றார். இந்தக் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மற்றும் சபைக்கு தலைவர் நன்றி தெரிவித்ததாகவும் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் இடம்பெறவேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழு தீர்மானித்ததாக தசநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எம்.யு.எம். அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேஷன், எம்.ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 5

Back to top button
error: