crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக டாக்டர் பிரியங்கி அமராபந்து

இலங்கை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பிரியங்கி அமராபந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இவருக்கான நியமன கடிதம் நேற்று (09) கையளிக்கப்பட்டதுடன் டாக்டர் பிரியங்கி அமராபந்து தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக 2021 மே மாதம் 07ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்ப்பாசன அமைச்சரும், தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது இலங்கையில் போதைப் பொருள் அச்சுறுத்தல்களை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான பாரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முன்னணி அரச நிறுவனமாகும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 14 = 24

Back to top button
error: