crossorigin="anonymous">
உள்நாடுபொது

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (09) மு.ப 10.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்படும்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளதுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை எப்போது விவாதத்துக்கு எடுப்பீர்கள். அதற்கான திகதியை அறிவிக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 66 − 61 =

Back to top button
error: