crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதி, ஜப்பான் பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகா (Yoshihide Suga) அவர்களிடம் ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) அவர்களுக்குமிடையில் இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

கொவிட் வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள், ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இச்சந்திப்பின்போது ஜப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ (Kitamura Toshihiro), முதலாவது செயலாளர் இமமுரா காயோ (Imamura Kayo), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோ ரும்  கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 6 =

Back to top button
error: