crossorigin="anonymous">
உள்நாடுபொது

“இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்” வர்த்தமானி அறிவிப்பு – கல்வி அமைச்சு

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகமாக செயல்பட்டு வந்த வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை  நேற்று (08) வெளியிட்டுள்ளது.

‘இலங்கை, யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் எந்தக் கட்டளையின மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 26 ஆந் திகதிய 968 / 6 ஆம் இலக்க அதிவிசேட வர்த் தமானியில் வெளியிடப்பட்ட அந்தக் கட்டளையை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதியிலிருந்து இத்தால் இல்லாதொழிக்கின்றேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழம் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில்நுட்பவியல் கற்கை பீடங்களை இந்த பல்கலைக்கழம் கொண்டிருக்கும்.

வியாபார கற்கைகள் பீடத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழி கற்பித்தல் துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறை, வியாபார பொருளியல் துறை, முகாமைத்துவம் மற்றும் தொழில் உரிமையான்மை துறை என்பன செயற்படும்.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞானத்துறை மற்றும் உயிரியியல் விஞ்ஞானத்துறை என்பன இயங்கும், தொழில்நுட்பவியல் கற்கை பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை செயற்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 48 + = 54

Back to top button
error: