crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச் எம் எம். ஹரீஸ் , எம் சி பைஸால் காசிம் , எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிலுள்ள தாருஸ் ஸலாமில் கூடிய கட்சியின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் நேற்று (22) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: