crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் எரிபொருள் பெற கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் மக்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருதில் எரிபொருளைப் பெறுவதற்கு கொட்டும் மழையிலும் மக்கள் மிக நீண்ட கியூ வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுச் செல்லும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கடந்த சில நாட்களாக, வெயில், மழை, இரவு – பகல் எனப் பாராது, நித்திரை இன்றி நள்ளிரவு தாண்டியும் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான கியூ வரிசையில் காத்திருந்து எரிபொருளை மக்கள் பெற்றுச் செல்கின்றனர்.

மின்சாரத் துண்டிப்பும் ஒருநாளில் 2 முறை இடம்பெறுவதினால் முதலாவது மின்சாரத் துண்டிப்புக்குள் எரிபொருளை பெற்றுச் சென்றவர்கள் போக மீதமான மக்கள் அடுத்த மின்சார இணைப்பு வரும்வரை அதே இடத்தில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

பிரதான வீதியில் இந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைந்துள்ளதனால் பாதையில் பயணிக்கும் வாகனப் போக்குவரத்திலும் பாரிய தடைகள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 + = 89

Back to top button
error: