crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பம்

இலங்கையில்10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடன் இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது

மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும். நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50000 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை எதிர்வரும் புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 87 =

Back to top button
error: