crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொவிட்19 தொற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டோர் மரண வீதம் அதிகம்

இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கப்படுகின்ற 12 மாவட்டங்கள் உட்பட அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குமாறு புதிய வழிகாட்டலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் மரணமடையும் வீதம் அதிகம் என்பதனால், இவர்கள் அனைவருக்கும் இத்தடுப்பூசியை வழங்குமாறு கொவிட் குழு வழங்கிய பரிந்துரைக்கமைய இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: