
எரிபொருள் மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு காரணமாக, உணவுப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் என சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.
இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை ஆகக்குறைந்தது 20 ரூபா முதல் 30 ரூபா வரை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொத்து ஒரு பார்சலின் விலையை 10 ரூபா முதல் 15 ரூபா வரை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.