crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கஹட்டோவிட்டவில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

கம்பஹா – கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இன்று (05) பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 18 வயது இளைஞர் ஆகிப் அனாப் உயிரிழந்துள்ளார்.

கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில் வெள்ள நீரில் மூழ்கிய ஆகிப் அனாப் மயக்கமுற்ற நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறந்த உடல் மேலதிக விசாரணைகளுக்காகவும் பிசிஆர் சோதனைக்காகவும் வதுபிடிவல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 69

Back to top button
error: