crossorigin="anonymous">
உள்நாடுபொது

தந்தையொருவர் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு

இராகலை – டெல்மார் தோட்டத்தில் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிசார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தில் நேற்று (04) இரவு அவரது மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் சண்டையாக மாறியுள்ள நிலையில் தந்தையை மகன் தாக்கியுள்ளார்.

இவ்வாறு வீடு ஒன்றிலிருந்து இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர், டெல்மார் மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 62 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் என அடையாளம் காணப்பட்டதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் இராகலை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இராகலை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விரைந்த பொலிசார் நிலைமையை ஆராய்ந்துள்ளதுடன் உயிரிழந்தவரின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இன்று (05) காலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த வலப்பனை நீதிமன்ற நீதவானின் விசாரணைக்கு பின் சடலத்தை சட்டவைத்தியர் ஊடான பிரேத பரிசோதணைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவிடப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 − 83 =

Back to top button
error: