crossorigin="anonymous">
வெளிநாடு

விமான பயணி முககவசம் அணிய மறுத்ததால் விமானம் திருப்பப்பட்டது

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 38 என்ற விமானம் ஒன்று மியாமியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் மியாமிக்கே திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் முக கவசம் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

விமானம் மீண்டும் மியாமிக்கு திரும்பியவுடன் சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சக பயணி ஒருவர் கூறும்போது, முழுமையான தகவல்கள் எங்களுக்கு சொல்லப் படவில்லை. ஆனால், விமானத்தில் ஒரு பயணி தவறுதலாக நடந்து கொண்டார் என்று தெரிவித்தார். அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானம் மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 20 =

Back to top button
error: