crossorigin="anonymous">
வெளிநாடு

ஜப்பான் – கிஷிமோடோ நகர அடுக்குமாடி குடியிருப்பில் தீ

ஜப்பான் – ஒசாகா மாகாணம் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மருத்துவமனை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்கள் கொண்ட 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடத் தொகுதியின் 4ஆவது தளத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் கட்டிடத்தில் உள்ள வணிக வளாகங்களில் இருந்த பலர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 11 =

Back to top button
error: