crossorigin="anonymous">
உள்நாடுபொது

மூன்று மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தேவைப்படும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் இதற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.

மேலும், தடுப்பூசியை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லை என சிலர் முன்வைக்கின்ற கருத்துக்களை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர், உலகில் கிட்டத்தட்ட 50 நாடுகள் எந்தவொரு தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய முடியாமலுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருப்பது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் அமைச்சர் கூறினார்

அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவற்றின் ஒரு பகுதி கண்டி மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் என்றார்

கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று கூறிய அமைச்சர், இம்மாவட்டத்தில் மிக கொவிட் தொற்று அனர்த்முள்ள பகுதிகளான குண்டசாலை மற்றும் மெணிக்ஹின்ன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அதிக அனர்த்முள்ள பிரதேசங்களுக்கு இவ்வாறு முன்னுரிமைளிக்கப்படும் என்றும், தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு இலங்கை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: