crossorigin="anonymous">
உள்நாடுபொது

சகலருக்கும் தடுப்பூசி ஏற்றிய பின்னர் 3வது டோஸ் ஏற்றுவதற்கு கவனம் செலுத்தப்படும்

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நவம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தடுப்பூசியேற்ற முடியும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கியுபத் தூதுவர் அன்ட்ரெஸ் கரிடொவுடன் நேற்று (26) காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

செப்ரெம்பர் மாதம் 15ம் திகதியை அண்மிக்கும் போது 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணியை பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகலருக்கும் தடுப்பூசி ஏற்றிய பின்னர் 3வது டோஸ் ஏற்றுவது பற்றி கவனம் செலுத்தப்படும். உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் கியுபா சுகாதாரச் சேவையின் அனுபவங்கள் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கியுபத் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 81 + = 83

Back to top button
error: