crossorigin="anonymous">
உள்நாடுபொது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் ஹேமசிறி மற்றும் பூஜிதவிற்கு முன்பிணை

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ​ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் நேற்று முன்தினம் (06) இவர்கள் மீதான மனு விசாரணைக்கு வந்தபோது முன்பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு முன்பிணை வழங்கிய நீதிபதிகள் விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு பிற்போட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதிகளான நாமல் பலல்லே ஆதித்திய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இசதீன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 + = 89

Back to top button
error: