crossorigin="anonymous">
வெளிநாடு

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 42 பேர் இறப்பு

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அண்டை நாடான பெல்ஜியத்தில் 6 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். அங்குள்ள லீஜ் நகரத்திலிருந்து குடியிருப்போர் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேற்கு ஜெர்மனியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − 32 =

Back to top button
error: