crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு 25 ஆம் திகதி

கொழும்பு 10, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது

வழமைபோன்று இரு அமர்வுகளாக மாநாடு நடைபெற இருப்பதோடு இரண்டாவது அமர்வில் யாப்பு திருத்தம், புதிய உத்தியோகஸ்தர் தெரிவு என்பன இடம்பெறும் என போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்மாநாடு நடைபெறுவதால் அங்கத்தவர்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்குவார்கள் என செயற்குழு எதிர்பார்க்கிறது.

முன்னதாக ஜூன் 24 ஆம் திகதி மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதோடு தவிர்க்க முடியாத காரணத்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 77 − 69 =

Back to top button
error: