
இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மறைந்த பேராசிரியர் சங்கீத வித்துவான் சனத் நந்தசிறியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று (30) அவரது இல்லத்திற்குச் சென்றார்.
சனத் நந்தசிறி கட்புல,அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வேந்தர் ஆவார்.
இலங்கையின் புத்தாக்கமிக்க இசைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் விதமாக கௌரவப் பேராசிரியர் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
சனத் நந்தசிறியின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களுடன் தனது அனுதாபங்களை பகிர்ந்து கொள்ளவும் எதிர்க்கட்சித் தலைவர் மறக்கவில்லை.