crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நாளை (20) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் நோக்கியில் ”உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்ததான நிகழ்விற்கு இராணுவம், பொலிஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட செயலகம், நில அளவை திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 25 = 35

Back to top button
error: