crossorigin="anonymous">
பொது

ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்க முயன்ற 5 பேர் கைது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திகளுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துச் செல்ல முயன்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

களுத்துறையில் இருந்து இன்று (12) சிறிதம்ம தேரர் மற்றும் வசந்த முதலிகே ஆகியோரின் உருவங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு குறித்த இரு பெண்களும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

களுத்துறை பாலத்தில், இரண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட கிட்டத்தட்ட இருநூறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களை வழிமறித்ததை அடுத்து, காலி வீதியூடாக பஸ்ஸில் கொழும்பு நோக்கி சென்ற 2 பெண்கள் மற்றும் குழுவினர், களுத்துறை வடக்கு பகுதியில் இறங்கி மீண்டும் பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களைக் கைது செய்ததாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 14 =

Back to top button
error: